ஹோட்டல் திறந்த சில மணித்தியாலங்களுக்குள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு தேவையான வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அதனால் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஹோட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ளது.ஜேர்மனியின் அம்பேர்க் நகரில் அமைந்துள்ள ஹஸ்வல் எனும் இந்த ஹோட்டலின் அபிமானி ஒருவர் தெரிவிக்கையில் அந்த ஹோட்டலின் பரப்பு மிகவும் சிறியது. ஆனால் அது அதிக ரொமான்ஸ் நிறைந்த பகுதியாக உள்ளது. ஏனென்றால் ஒரு நேரத்தில் ஒரு ஜோடி மாத்திரமே உள்ளே சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். 300 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஹோட்டல் ஏழு அடி அகலத்தை மட்டுமே கொண்டது. காதல் ஜோடிகளால் இந்த ஹோட்டலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது. ஹோட்டல் உரிமையாளர் மரினா ஸ்கெரீனர் விபரிக்கையில், எங்கள் ஹோட்டலில் ஒரேயொரு அறை மட்டுமே உள்ளது. ஆனால் ஸ்பா மற்றும் ஆடம்பரக் கட்டில் உட்பட நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு வசதியும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஹோட்டல் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் நாங்கள் இந்த அறையில் தங்குவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிட்டது. ஆனால் அது மிகவும் பெறுமதியானது. வேறு எந்த ஹோட்டலில், குழப்பமடையக் கூடிய பக்கத்து அறை விருந்தினர்கள் மற்றும் மெல்லிய சுவர் பற்றி கவலையின்றி நீங்கள் மாத்திரம் தனியாக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். |
Monday, October 18, 2010
மிகச் சிறிய உல்லாச ஹோட்டலுக்கு மிகப்பெரிய வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment