Wednesday, October 6, 2010

நிலவு சுருங்குவதாக புதிய ஆய்வுகள்




நிலவு அதன் முன்னைய நிலையிலிருந்து சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சயன்ஸ் எனும் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிலவின் மேற்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிளவுகளை மையப்படுத்தி புதிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

நிலவின் உட்பகுதி குளிர்மையடைந்து வருவதால் அதன் மொத்த அளவும் சுருங்கிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள், 14 புதிய பிளவுகளை கண்டறிந்துள்ளன.

கடந்து பல பில்லியன் ஆண்டுகளில் நிலவு 100 மிட்டர் அளவு வரை சுருங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.


நிலவின் இந்த மாற்றம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது என்றும், இது தொடர் நிகழ்வு எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இது பூமியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment