|
கடந்த சுமார் ஒருமாத காலமாக சிலி நாட்டில் நிலத்துக்கடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் சிக்குண்டுள்ள 33 சுரங்கத் தொழிலாளிகளும் நலமாய் உள்ளனர் என்று கடைசியாக வெளியிடப்பட்ட விடியோ படக்காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களை பாதிப்புக்கள் எதுவுமின்றி பத்திரமாக மீட்டெடுக்க முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குழாய் வழியாக நிலத்துக்கு அடியில் செலுத்தப்பட்ட விடியோ கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட படக்காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.
அதில் அவர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன.இது இவர்களது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.இவர்களை மீட்டெடுக்க குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் செல்லும் அன அறிவிக்கப்பட்டுள்ளது. | |
|
No comments:
Post a Comment