இந்த கொடூர தண்ட னையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளன. இதுபோன்ற கருத்தை பிரான்ஸ் பிரதமர் சர்கோஷியின் மனைவி கர்லாபுரூனி மற்றும் பிரான்ஸ் நடிகை இசபெல்லா அட்ஜானி ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதற்கு ஈரான் நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “கேஹான்” என்ற பத்திரிகை தனது தலையங்கத்தில் கர்லாபுரூனியை கடுமையாக சாடியுள்ளது. அவர் ஒரு “கபட வேடதாரி” என வர்ணித்துள்ளது. மேலும் ஒரு பத்திரிகை கர்லா புரூனியையும், நடிகை இசபெல்லா அட்ஜானியையும் “விபசாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக வர்ணித்து உள்ளது. 43 வயது சாகினேகை காப்பாற்ற மனித உரிமை போராட்டம் என்ற பெயரில் “பிரான்ஸ் விபசாரிகள்” களம் இறங்கியுள்ளனர் என எழுதியுள்ளது. பிரான்ஸ் பாடகர் பெஞ்சமின் பயோலேயுடன் புரூனிக்கு கள்ளத்தொடர்பு என்றும் தெரிவித்துள்ளது. ஈரான் அரசு டி.வி.யும் கர்லா புரூனியை கடுமையாக சாடியுள்ளது. இதன் மூலம் அவர் தனது ஒழுக்கமின்மையை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் நாட்டு அரண்மனை வட்டாரம் இந்த விமர்சனங்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது. இதற்கிடையே தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களால் கர்லா புரூனி அதிர்ச்சியில் உள்ளார். |
Thursday, September 2, 2010
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment