அலுவலக கணணி மூலம் இணையதளத்தில் ஆபாச படம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தினைச் சேர்ந்தவர் பவுல்மெக்காலே.இவர் துறைமுகம்,மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டு அவுஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றார். இந்நிலையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அலுவலக விபரங்களை பதிவு செய்து கொள்வதற்காக இணையதள இணைப்புடன் கணணி வழங்கப்பட்டிருந்தது. அப்படி வழங்கப்பட்ட அலுவலக கணனியில் பவுல் மெக்காலே ஆபாசபடம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், இணையதள வாயிலாக சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் புகார் எழுந்தது. கையும் களவுமாக சிக்கிய அமைச்சர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். |
No comments:
Post a Comment