Sunday, November 21, 2010

மாணவியை விட்டு இணைபிரியாமல் அதிக பாசத்துடன் பழகும் சிட்டுக்குருவி!

இணைபிரியாத தோழியைப்போல மாணவியை விட்டுப் பிரியாத சிட்டுக் குருவி அவளையே சுற்றி சுற்றி வருகிறது. பெற்ற குழந்தைகளே இன்று பெற்றோரை புறக்கணிக்கும் நிலையை கண்கூடாக காண்கிறோம்.

ஆனால் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகள் தங்களை வளர்த்தவர்களை பெற்றோர் போல் கவனித்துக் கொள்கின்றனர்.

மனிதர்களுக்கு மட்டும்தான் அன்பு காட்டத் தெரியுமா? ஐந்தறிவு ஜீவன்களான எங்களாலும் அன்புக்கு இலக்கணமாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது மாணவி வளர்க்கும் சிட்டுக் குருவி. ஊட்டி அருகேயுள்ள இந்து நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்திகா (13).

இவள் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அருகேயுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிம் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2 மாதத்துக்கு முன் கீர்த்திகா பள்ளிக்கு சென்றாள். செல்லும் வழியில் சிட்டுக் குருவி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.அதனை அன்போது தனது இல்லத்துக்கு எடுத்து வந்தாள் கீர்த்திகா.

தனது உடன் பிறந்த சகோதரியாக அதனை அன்போடு கவனித்து வளர்த்து வந்தாள். அதற்கென தனிக் கூண்டு அமைத்து கண்ணை இமை காப்பது போல் பார்த்துக் கொண்டாள். கீர்த்திகாவின் சீரிய முயற்சியாலும், அவள் காட்டிய கருணையாலும் சிட்டுக்குருவி சீரான வளர்ச்சி பெற்றது. தற்போது கீர்த்திகாவின் தோழியாகவே மாறி விட்டது.

கீர்த்திகா பள்ளிக்கு கிளம்பும் போது அவளது புத்தப்பை மேலை அமர்ந்து கொண்டு சிறிது தூரம் பயணம் செய்யும். அவரது கடைக்கண் பார்வை கிடைத்ததும் பிரியா விடை பெற்று பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு பறந்து வந்து விடும். வீட்டை விட்டு எங்கே சென்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பி விடும்.

கீர்த்திகாவின் தம்பி கார்த்தியும் சிட்டுக் குருவிக்கு நெருங்கிய தோழனாகி விட்டான். இருவரும் சாப்பிடத் தொடங்கியதும் அருகில் வந்து அமர்ந்து கொள்ளும். அவர்கள் ஏதாவது தாணியத்தை லேசாக மென்று அதை தங்கள் நாவில் வைத்து நீட்டினால்அதை அப்படியே ருசித்து சாப்பிடும். எப்போதும் இணை பிரியாத தோழி போல் விளங்கும் சிட்டுக்குருவியை எல்லோரும் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment