Sunday, November 21, 2010

சிங்கத்துக்கு சவர்க்காரமிட்டு நீராட்டும் அதிசய நபர் (படங்கள் இணைப்பு)

நீராடுவதென்றால் சிங்கங்களுக்கு 'அலர்ஜி'. அவை நீராடுவதற்கு விரும்புவதும் இல்லை அதிக ஆர்வம் காட்டுவதுமில்லை.

ஆனால் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர், தான் பராமரித்துவரும் ஷியென் என்ற சிங்கத்தை மிகவும் செல்லமாக நீராட்டி வருகின்றார்.

அதற்கு சவர்க்காரமிடவும் இவர் தவறுவதில்லை.

இவர் ஓர் சிறந்த விலங்குப் பயிற்றுவிப்பாளராவார். சுமார் 35 ஆண்டுகளாக இவர் இத்துறையில் பணியாற்றி வருகின்றார்.

தென்னாபிரிக்காவில் உள்ள லயன் பார்க் ஹவுஸ் எனப்படும் விலங்குகளுக்கான பூங்காவிலேயே இவர் தனது சிங்கத்தை நீராட்டுகின்றார்.

சுமார் 208 ஏக்கர் பரப்பளவிலான இப்பூங்காவில் சிங்கங்கள், சிறுத்தைப்புலிகள் உட்பட 300இற்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி நடக்கும் இந்த நீராடலையும் இவருக்கும் சிங்கத்திற்கும் இடையிலான பாசப்பிணைப்பையும் நீங்களே இப்புகைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.





No comments:

Post a Comment