சீறிப் பாய்ந்த காளை; சிதறி ஓடிய மக்கள் கூட்டம் - பெண் உட்பட நால்வர் படுகாயம் (வீடியோ இணைப்பு)
எட்மோண்டனில் நடைபெற்ற காளையை அடக்கும் இறுதிப்போட்டி நேற்று நடந்து கொண்டிருந்த போது திடிரென காளை ஒன்று பார்வையாளர் கூட்டத்திற்குள் சீறிப் பாய்ந்தது. நான்கு வயாதாகும் இந்தக் காளையின் திடீர் சீற்றம் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் ஒரு சில நிமிடங்கள் திகிலில் உறைய வைத்து விட்டதாக பார்வையாளர்கள் கூறினர்.
கூட்டத்திற்குள் சீறிப் பாய்ந்த காளைக்கு பயந்து அனைவரும் சிதறி ஓடிய போதும் அவர்களைத் துரத்திய காளை ஒரு பெண் உட்பட நால்வரை பதம் பார்த்தது. ரேவிந்த் என பெயரிடப்பட்டுள்ள அந்தக் காளை இதுவரை 10 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது
ஒருபோதும் இப்படி பார்வையாளர்கள் திசையில் பாய்ந்ததில்லை எனவும் வீட்டிற்கு எடுத்துச் சென்று தகுந்த பயிற்சியளித்த பின் மீண்டும் இந்தக் காளை போட்டிகளில் கலந்து கொள்ளும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment