Sunday, November 21, 2010

அமெரிக்காவில் பதினெட்டும் பெற்று பெருவாழ்வு வாழும் மகராசி! �(படங்கள் இணைப்பு)

அளவான குடும்பம் தெவிட்டாத இன்பம், நாமிருவர் நமக்கிருவர் என்பது சிறந்த குடும்பத்திற்காகச் சொல்லப்படுகின்ற உதாரணங்களாகும்.

மேலும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என திருமணங்களின் போது தம்பதியரை வாழ்த்துவதுமுண்டு. இதன் பொருள் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பது.

ஆனால் சிலர் 16 என்பதை குழந்தைகளின் எண்ணிக்கை என தவறாக நினைத்து விடுகின்றனர்.

அவர்களைப் போன்று, அதனை தவறாக நினைத்துக்கொண்ட தம்பதி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

அமெரிக்காவின் டென்னெசி நகரைச் சேர்ந்த கில் மற்றும் கெலி தம்பதியரே இவர்கள். ஆம், இத்தம்பதியினருக்கு 18 குழந்தைகள்.

மூத்த பிள்ளையின் வயது 21.18ஆவது குழந்தையின் வயது 1 மாதம் மட்டுமே.

இத்தம்பதியனர் 23 வருடங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாகவுள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர்.

தினசரி இவர்களின் வீடு, வைபவம் ஒன்று நடப்பதைப் போலவே காட்சியளிக்குமென இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பெ..ரி..ய..குடும்ப அங்கத்தவர்களைப் பார்த்து நீங்களும் மகிழுங்களேன்







No comments:

Post a Comment