Sunday, November 21, 2010

70 வயதாகும் பிரிட்டன் பாட்டியை துரத்தி துரத்தி காதலித்து மணந்த 20 வயது இளைஞர்

டொரோத்தி பிரிட்டனை சேர்ந்த 70 வயது பாட்டி. 21 வயதில் இவருக்கு ஒரு பேத்தி உண்டு. நேற்று வெண்ணிற உடையில் திருமணக் கோலத்தில் ஜொலித்தார் பாட்டி. 20 வயதாகும் இளைஞருக்கும் இவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.

பாட்டி திருமணத்திற்கு ஒகே சொல்லியதில் மணமகனுக்கு ஏகப்பட்ட சந்தோசமாம். 2006 இல் நண்பர்களுடன் விடுமுறைக்காக துனிசியாவிற்கு சென்ற போது ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தவர் தான் ரபா என்ற இந்த இளைஞர்.


50 வருட இடைவெளியை சிறிதும் பொருட்படுத்தாமல் ரபா தன் பின்னால் அலைவதைக் கண்டு பாட்டிக்கு எரிச்சலே உண்டாகியதாம். எவ்வளவோ முறை பாட்டி சொல்லியும் கேட்காமல் துரத்தி துரத்தி பின்னால் அலைந்து மனதை வென்றுள்ளதாக பிரிட்டன் பாட்டி கூறுகிறார். ரபாவுடன் இணைந்து சுற்றிய தருணங்களையும், முதல் முத்தத்தையும் சுவைபட விவரிக்கிறார் பாட்டி. விடாமுயற்சி என்பது இதுதானோ!!!!!!!!

No comments:

Post a Comment