Sunday, November 21, 2010

400 உயிர்கொல்லி சிலந்திகளுடன் சாதனை முயற்சியில் அவுஸ்திரேலியர்! (வீடியோ இணைப்பு)



உலக சாதனை படைப்பதற்காக 400 உயிர்கொல்லி சிலந்திகளுடன் கடந்த மூன்று வாரகாலமாக வசித்து வருகின்றார் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த நிக் லீ சொய்ப்.

தர்ம நிதியம் ஒன்றுக்கு நிதி சேகரிக்கும் ஒரு நல்ல நோக்கிலேயே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முன் பகுதியில் மட்டும் கண்ணாடி யன்னல் போடப்பட்ட அகலமான ஒரு கூண்டுக்குள் 400 விஷச் சிலந்திகளுடன் அவர் கடந்த மூன்று வாரமாக வாழ்ந்து வருகின்றார். 30 வருடங்களுக்கு முன் இதே சாதனையை அவர் புரிந்துள்ளார்.

இவர் ஒரு சிறுவர் தர்ம நிதியத்துக்கு 50 ஆயிரம் டொலர்களைத் திரட்டிக் கொடுக்கும் நோக்கில் தற்போது தனது சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சிலந்திகளைப் பார்த்து நான் பயப்படவில்லை ஆனால் அதேவேளை அவற்றின் மீது பெரிய நாட்டமும் இல்லை என்று கூறினார் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள 67 வயதான லீ சொய்ப்.

பாம்புகளுடன் இருந்து சாதனை புரிய வேண்டும் என்பது தான் அவரின் ஆரம்பத்திட்டம் ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே தான் சிலந்தியைத் தெரிவு செய்தார்.

No comments:

Post a Comment