அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் தன் குடும்பத்தினருடன் விமானப்படையினருக்குச் சொந்தமான சாலி-130 வகை விமானமொன்றில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது மகனுக்கு விமானமோட்டிப் பார்க்க ஆசை பிறந்துள்ளது.
அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச பலவந்தமாக விமானியின் அறைக்குள் பிரவேசித்து தன் மகனுக்கு விமானமோட்டக் கற்றுக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக விமானிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஆயினும் வேறு வழியின்றி ஒரு விமானியின் இருக்கையை அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் ஒதுக்கிய அவர்கள் அமைச்சரின் மகனுக்குச் சற்று நேரம் வரை விமானமோட்டப் பயிற்சியளித்துள்ளனர். அதற்காக விமானம் இரு தடவைகள் யாழ்ப்பாணத்தின் மீது வட்டமடித்துப் பறந்துள்ளது.
அதன் போது விமானத்தில் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் சுமார் நூற்றி ஐம்பது பேரளவில் இருந்துள்ளனர். அவர்கள் விடயமறிந்தவுடன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக அமைச்சர் மெதுவாக விமானியின் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
ஆயினும் நூற்றுக்கும் அதிகமான விமானப் பயணிகளின் உயிருடன் விளையாடத் துணிந்த அமைச்சரின் செயல் குறித்து பல தரப்பிலிருந்தும் தற்போது கண்டனக் குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன.
No comments:
Post a Comment