நாய்களுக்கு பயிற்சி கொடுக்கின்றமைக்கு பிரத்தியேக வழி முறைகள் பல இருக்கின்றன. ஆனால் மலேசிய இளைஞன் ஒருவர் சின்னஞ் சிறிய நாய்க் குட்டி ஒன்றை பயிற்சி வழங்குதல் என்கிற போர்வையில் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். நாய்க் குட்டி இரண்டு கால்களில் நிற்க வேண்டும் என்று இவர் பிடிவாதமாக உள்ளார்.ஆனால் நாய்க் குட்டியால் முடியாமல் உள்ளது. நாய்க் குட்டி தவறு இழைக்கும்போது எல்லாம் அதனைத் திட்டுகின்றார். அடிக்கின்றார். தூக்கி எறிகின்றார். இவரது காதலி இந்நிகழ்வை வீடியோ பதிவு செய்து சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக்கில் உலா வர விட்டுள்ளார். இது ஒரு 15 நிமிட வீடியோ. வீடியோவில் இப்பெண்ணின் குரலும் பதிவாகிஉள்ளது.ஆனால்காதலனை இப்பெண் கண்டிக்க தவறி இருக்கின்றார். நாயை துன்புறுத்திய நபரின் பெயர் அலன் ரன் சம் அலன். 20 வயது வரை இருக்கலாம்.காதலியின் பெயர் டூரின் லூ.நாய்க்குட்டியின்பெயரசூசி. இந்நாய்க் குட்டி காதலிக்கு சொந்தமானது.நாய் இரண்டு கால்களில் நிற்க வேண்டும் என்பது காதலியின் அபிலாசை. அந்த அபிலாசையை நிறைவேற்றுகின்றமைக்காக காதலன் நாய்க் குட்டியை துன்புறுத்துகின்றார். நாய்க் குட்டியை இவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பேஸ் புக்கில் தனிப் பக்க்ம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. |
Saturday, January 29, 2011
இரண்டு கால்களில் நிற்கச் சொல்லி நாய்க் குட்டியை சித்திரவதை செய்யும் மனிதன் (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment