Saturday, January 22, 2011

திருமணம் ஆன ஆண்களை ஏன் திருமணம் ஆகாத பெண்கள் விரும்புகின்றனர்?

திருமணம் ஆகாத பெண்கள் ஏற்கனவே திருமணம் ஆன ஆண்கள் மீது ஒரு கண் வைத்து இருக்கின்றார்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்து உள்ளது.

கன்னிப் பெண்களுக்கு கலியாணம் முடித்த ஆண்கள் மீது இனம் தெரியாத ஒரு பிரியமும், ஈர்ப்பும், ஈடுபாடும், பிடிப்பும் இருக்கும் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

இந்த ஆய்வை Anthony Little என்கிற உளவியல் அறிஞர் மேற்கொண்டு இருந்தார்.

இன்னொரு பெண்ணுடன் ஒரு ஆணை ஏற்கனவே கண்டு இருக்கின்றபோது அந்த ஆண் மீது வேறு ஒரு பெண்ணுக்கு நாட்டம் ஏற்படுகின்றமை இயல்பு என்கிறார் இந்த அறிஞர்.

திருமணம் ஆன ஆண் ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றமைகூட திருமணம் ஆகாத பெண் விரும்புவார் என்றும் இவ்வாய்வின் மூலம் தெரிய வந்து உள்ளது.

ஆனால் திருமணம் ஆன பெண்களுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் மீது பெரிய அளவில் ஈடுபாடு இருக்காது என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment