Saturday, January 29, 2011

1500 நாய்களை வளர்க்கும் விநோத பெண்- (படங்கள் இணைப்பு)


சீன நாட்டுப் பெண் ஒருவர் 1500 தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கின்றார்.

இவரின் பெயர் Ha Wenjin.

நாய் வளர்ப்புக்காக வீடு, கார், நகை ஆகியவற்றை விற்று உள்ளார். தொழிலையும் தியாகம் செய்தார்.

இந்நாய்களுக்கு என புகலிடம் ஒன்றை நிறுவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

இவர் ஆரம்பத்தில் நாய் வளர்ப்பில் சிறிய அளவிலேயே ஈடுபட்டு இருந்தார்.

அப்போது ஒரு விடயத்தை அறிந்து கொண்டார்.

ஏராளமான நாய்கள் பராமரிப்பாளர் இல்லாமல் தெருவில் அலைந்து திரிகின்றன என்பதுதான் அவ்விடயம்.

1500 நாய்களையும் பராமரிக்கின்றமைக்கு 10 ஊழியர்களை சம்பளம் கொடுத்து வைத்திருக்கின்றார்.

இதே நேரம் 200 பூனைகளையும் பராமரித்து வருகின்றார். பூனைகளை பராமரிக்க இரு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.


























No comments:

Post a Comment