Saturday, September 25, 2010

லேடி காகா, குஷ்பு, பிரச்சனைகளால் விளம்பரம் தேடும் பிரபலங்கள..?


பிரபலங்கள் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளவே பிரச்சனைகளை உருவாக்குவார்கள் போலும். அண்மையில் எம்.டீவியின் சிறந்த இசை வீடியோக்களுக்கான  விருது வழங்கும் விழா நடந்தது.  இவ்விழாவில் சிறந்த இசை அல்பத்திற்கான விருது லேடி ககாவுக்கு கிடைத்தது.  இவ்விழாவுக்கு வந்திருந்த அவர் உடுத்தியிருந்த ஆடை இப்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பச்சையான மாட்டிறைச்சியில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை, அப்படியே மேலாடையாக போர்த்திக்கொண்டு மேடைக்கு வந்தார் அவர்.

இது உண்மையான இறைச்சியா என பரிசோதிப்பதற்கு அவருடைய ஆடையின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்படட்டது. இதை பரிசோதித்த நியுயோர்க் இறைச்சி கடைகாரர் உண்மையானது தான் என உறுதிபடுத்தியுள்ளார். இது வக்கிரத்தை ஏற்படுத்தும் செயல் எனவும், பிற உயிரினங்கள் மீது காழ்புணர்ச்சி காட்டபடுகிறது எனவும் கால்நடை பாதுகாப்பு இயக்கங்கள் போர்க்கொடி  தூக்கியிருக்கின்றன.

இளைனர்களுக்கான ஆஸ்கர் என அழைக்கப்படும் இவ்விருது வழங்கும் விழாவை இந்த வருடம் டீவியில் மாத்திரம் 11 .4  மில்லியன் மக்கள் பார்வையிட்டனர்.
இப்படி ஒரு விழாவில் லேடி ககா உடுத்தியிருந்த ஆடை பார்வையாளர்களிடம்  கடுமையான விமர்சனத்தை உருவாக்கியிருகிறது.
2010 MTV Video Music Awards
இது இப்படியென்றால் இன்றைய தமிழ் செய்திகளில் அடிபடுவத தென்னிந்தியப் பிரபலம் நடிகை குஷ்பு.  உருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலி கோர்த்து அணிந்து பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. பிரபலங்களுக்குப் பிரச்சனைகள் என்பதும் ஒரு விளம்பரம்தானே. இவ்வாறான விளம்பரங்கள் இருந்தால்தானே அவர்களும் பிரபலங்களாக இருக்க முடியும் என்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மீண்டவர் குஷ்பு என்பது தெரிந்ததே.

No comments:

Post a Comment