Saturday, September 25, 2010

ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களின் பெயர்களை வேகமாக மாற்றுவது (rename) எப்படி? - விண்டோஸ் டிப்ஸ்.


விண்டோஸில் குறிப்பிட்ட பால்டரில் இருக்கும் அதிகமான பைல்களின் பெயரை மாற்ற (ரீநேம்) வேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்கின்றதா?. ஒவ்வொரு பைல்களிலின் மீதும் வலது கிளிக் செய்து பின்னர் Rename ஆப்ஸனை தேர்வு செய்வது நேர விரயமாகும். இதை எவ்வாறு மிக வேகமாக செய்வது?

இதற்கு இலகுவான வழியொன்று உள்ளது. பால்டரை திறந்து பெயர் மாற்ற வேண்டிய பைலை வலது கிளிக் செய்து ரீநேம் செய்யுங்கள். அதன் பின்னர் கீபோட்டில் டாப் விசையை அழுத்தியதும் அடுத்த பைலுக்குரிய ரீநேம் ஆப்ஸன் தானகவே தேர்வு செய்யப்படும். பெயரை கொடுத்து மீண்டும்  டாப் கீயை அழுத்தி அடுத்த பைலுக்கு செல்லலாம்.

அதிகமான பைல்களை ரீநேம் செய்ய விரும்புவர்கள் இந்த முறையைக் கையாண்டால் இன்னும் வேகமாக செயற்படலாம். வீடியோ இணைப்பை பார்க்கலாம்.

No comments:

Post a Comment