இலங்கையில் இஸ்ரேலின் உத்தியோக பூர்வ அலுவலகம் ஒன்று இரகசியமாக இயங்கிவருவதாக தெரிவிக்க படுகின்றது கொழும்பில் இயங்கிவரும் அந்த அலுவலகம் இலங்கையில் இருந்து பணிப்பெண்களைச் இஸ்ரேலுக்கு அனுப்ப தேவையான விசா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்க படுகின்றது பெயர் பலகைகள் அற்ற நிலையில் இயங்கும் இந்த அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இரு நாடுகளும் தங்களது தூதரக உறவுகளை 1970 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் முறித்துக் கொண்டன. இந்த நிலையில் 2000ஆண்டு முன்னால் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக் காலத்தில் வடக்கில் குறிப்பாக்க யாழ்ப்பாணத்தில் போர் உக்கிரமடைந்திருந்த நிலையில் இலங்கைக்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டது. அந்த காலப்பகுதியில் இந்தியா இராணுவ உதவியை நிராகரித்து விட்டதால் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள இலங்கை முடிவு செய்ததது. இதன் பிரகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதர் ஜான் டி சாரம் மற்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லெவி ஆகியோர் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் நியூயார்க் நகரில் கையெழுத்திட்டனர். உறவு புதுப்பிக்கப்பட்ட பின் இரு நாடுகள் சார்பில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கபட்ட கூட்டறிக்கையில், தூதரக அளவில் முதலில் உறவு ஏற்படுத்திக் கொள்ளப்படும். படிப்படியாக பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கபட்டது எனினும் உறவு புதுப்பிக்கப்பட்டாலும் கூட இப்போதைக்கு இரு நாடுகளும் தங்களது தூதரகத்தை அமைக்காது என்று கூறப்பட்டது விரிவாக பார்க்க
இதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இந்த வருடத்தில் ஆரம்ப பகுதியில் இஸ்ரேல் இலங்கையுடன் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கு இடையில் வியாபார கவுன்சில் ஒன்றை ஏற்படுத்த போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer க்கும் இடையில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சந்திப்பில் இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
விவசாயம், தொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்நுட்பம் உட்பட மற்றும் பல்வேறு துறைகளில் இவ்விரு நாடுகளும் இணைந்து புதிய திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் இச்சந்திப்பின் போது உடன்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer இஸ்ரேலியப் பிரதமர் Shimon Peres இன் முன்னாள் கொள்கை வகுப்பு ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரேல் உளவமைப்பான மொஸாட்டின் கோமான்டோகள் மூலம் ஏககாலத்தில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இராணுவ பயிற்சி அளித்தமையும் இரு தரப்புக்கும் ஆயுதங்களை விற்பனை செய்தமையும் இலங்கை அரசுக்கு ஆயு தங்களை வழங்கிய இஸ்ரேல் புலிகளுக்கு குறித்த ஆயுதங்களை தாக்கி அழிக்க கூடிய ஆயுதங்களை பட்டியலாக தயாரித்து புலிகளிடம் கொடுத்தமையும் ஏக காலத்தில் இரு தரப்புக்கும் ஆயுதங்களை விற்பனை செய்தமை பற்றிய செய்திகள் வெளியானமை குறிபிடதக்கது இந்த நிலையில் தற்போது இலங்கையில் இஸ்ரேலின் உத்தியோக பூர்வ அலுவலகம் ஒன்று இரகசியமாக இயங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment