Friday, September 24, 2010

டைட்டானிக் விபத்துக்கு பனிப்பாறை மட்டும் காரணமல்ல! - வெளியானது புதிய தகவல்


புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912 ம் ஆண்டு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதற்கு காரணம் பனிப்பாறையுடன்  கப்பல் மோதியது தான் என இதுவரை காலமும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கப்பல் கேப்டனின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கப்பல் தொடர்ந்து தவறான பாதையில் செலுத்தப்பட்டதால் தான் இவ்விபத்துக்கு காரணம் என புதிய தகவல் வெளியாகியுள்ள்து.
லூயிஸ் பட்டென், எனும் எழுத்தாளர் கடந்த புதன்கிழமை வழங்கியிருந்த செவ்வியில் இதனை தெரிவித்தார். அவர் டைட்டானிக் கப்பல் ஓட்டுனர்களில் இரண்டாம் கட்ட கேப்டனான சார்லஸ் லைட்டொல்லெர் என்பவரின் பேத்தி ஆவார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில், சுமார் 100 வருடங்களுக்கு முன்னர், நடந்த டைட்டானிக் கப்பல் விபத்தில் உண்மை என்ன என்பது மறைக்கப்பட்டுள்ளது. லைட்டொல்லெர் தான், டைட்டானிக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களில், கேப்டன் குழுவில் எஞ்சியிருந்தவர். அவரிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்த அட்லாண்டிக்குழுவினரிடம் அவர் உண்மையை கூறவில்லை. தனது வங்கிக்கணக்குகளுக்கும், தொழிலுக்கும் ஆபத்து வரலாம் என பயந்தார்.

ஆனால் பின்னர் ஒரு நாள் அவர் உண்மையை கூறினார். அக்கப்பலில் பணிபுரிந்த கப்பல் கேப்டன்களால் இலகுவாக பனிப்பாறையை நிராகரித்திருக்கலாம். கப்பலை அவர்கள் பாதுகாப்பாகத்தான் ஓட்டிக்கொண்டிருந்தனர். திடீரென நேரெதிரே பனிமலை வந்ததும் அதில் இருந்து தப்புவதற்காக கப்பலை இடது புறமாக ஓட்டுனர் ரொபேர்ட் ஹிட்சென்ஸ் திருப்பினார். அது சரியான தீர்வே! எனினும் திடீரென அவர் அச்சப்பட்டார். கப்பல் கேப்டனின் அறிவுறுத்தலும் சரியானதை தீர்மானிக்கவில்லை.
மீண்டும் தவறான வழியில் கப்பலை திருப்பினர். கப்பல் பனிப்பாறையுடன் மோதி, இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்தது.

அவர்கள், எடுத்த முடிவு தவறுதலானது என்பதை உணரும் போது விபத்து நடைபெற 4 நிமிடம் தான் இருந்தது. அதனால் விபத்தை தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இது தான் நடந்ததென லைட்டொல்லர் கூறியதாக லூயிஸ் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment