Friday, September 24, 2010

ஆமர்வீதியில் அம்பலத்துக்கு வந்த அந்தரங்கத் தொழில்!

  கொழும்பு ஆமர்வீதியில் நாளுக்கு நாள் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தி சாய்ந்ததும் சந்திக்கு சந்தி நிற்கத்தொடங்கும் அவர்கள் தங்களது காமப் பார்வையை வீசி இளைஞர் முதியோர் என்று பார்க்காமல் வலைவிரிப்பது வழமை. 

வாடிக்கையாளர்களுடன் அவர்கள் பேரம்பேசும் விதமே தனிதான். 

நிலைமை இவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் இரவு சுவாரஸ்யமான சம்பமொன்று நடந்தது.

ஆமர்வீதிக்கு மாற்றுடையில் வந்த பொலிஸார் விபச்சாரிகளிடம் பேரம் பேசத் தொடங்கினார்கள். வழமைபோல வெட்கப்படுவதாய் நடித்து கூச்சம் கலந்த புன்சிரிப்புடன் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீரென சுதாகரித்த பொலிஸார் பெண் ஒருவரை துரத்த ஆரம்பித்தனர். மாற்றுடையில் வந்திருப்பவர்கள் பொலிஸார் தான் என்பதை அறிந்துகொண்ட அப்பெண் தலைதெறிக்க ஓடினாள்.

இவர்களும் விடுவதாயில்லை. அந்த ஓட்டத்தைப் பார்த்தால் "மாட்டினோமோ, மண்டை ஓடு கூட மிஞ்சாது" என்பது போலத்தான் இருந்தது.

தப்பினோம்... பிழைத்தோம் என அவள் ஓடி மறைய அதேநேரத்தில் மற்றைய பெண்களும் கண்டபடி ஓட ஆரம்பித்தது தான் அங்கே சுவாரஸ்யமான விடயம்.

ஆமர்வீதியில் இருந்த அனைவருமே கைகொட்டிச் சிரித்து அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தார்கள். ஆனால் விபசாரத்தில் ஈடுபட்ட எவருமே பொலிஸாரிடம் அகப்படவில்லை.

அந்தரங்கமாகச் செய்துவந்த தொழில் அம்பலத்துக்கு வந்ததில் பலருக்கு அதிர்ச்சி. இவர்களெல்லாம் இந்தத் தொழில் செய்தவர்கள் தானா என இளைஞர்கள் சிலர் ஆச்சரியப்பட்டதையும் காணக்கூடியதாகவே இருந்தது. அந்த வகையில் இளைஞர்கள் சற்று விழிப்புடன் இருப்பார்கள் அல்லவா?

இவர்கள் திருட்டுத் தொழிலிலும் ஈடுபடுவதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

விபசாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் இவர்களால் இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார்கள் பொதுமக்கள்.

பாலியல் தொழிலாளர்களை மாத்திரம் தவறு சொல்வதில் பயனில்லை. அவர்களை ஊக்கப்படுத்தும் ஏனைய சக்திகள் குறித்தும் பொலிஸார் சிந்திக்க வேண்டும் என எமது கருத்தை முன்வைத்து அவ்விடத்திலிருந்து நாம் நகர்ந்தோம்.

No comments:

Post a Comment