சக உறுப்பினர்களினால் ஆச்சரியமாக பார்த்ததை விட வேறொன்றும் செய்யமுடியவில்லை. பாதுகாப்பிற்கும், அரவணைப்பிற்குமாக பிறந்த குழந்தையை பெண்கள் வேலை இடத்துக்கு கொண்டுவரலாம் என்ற சட்டம், லிசியாவுக்கு சாதகாமாகியது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வந்திருந்த லிசியாவின் நெஞ்சோடு குழந்தை அரவணைக்கப்பட்ட படி ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தது.
சுற்றிவர என்ன நடைபெறுகிறதென்பது தெரியாமல் குழந்தை ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்க, அதன் நெற்றியில் முத்தமிட்ட படி, வாக்கெடுப்பில் கலந்துகொண்டர் லிசியா.
35 வயதாகும் லிசியா, கடந்த வருடம் இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
இவர் தேர்தலில் நின்ற போது 40,000 வாக்குகளுடன் அம்மாநில ஆசனத்தை கைப்பற்றினார். லிசியாவும் அவரது கணவரும், இத்தாலிய அதிபர் பெர்லுஸ்கோனியின் நெருங்கிய நண்பர்கள். இருவரது திருமணத்தையும் அவர் தான் நடத்தி வைத்தார்.
தற்போது, ஸ்ட்ராஸ்பேர்க் மாநில சுற்றுப்புற சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு குழுவில் அங்கத்தவராக இருப்பதுடன், ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் அங்கத்தவராக இருக்கிறார் லிசியா.
பெண்களுக்குரிய சம உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் முன்னிற்கும் லிசியா, தானே இதற்கு முன்னுதாரணமாக மாறிக்காட்டியுள்ளார் என வெஸ்ட்மினிஸ்ட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்குரிய சம உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் முன்னிற்கும் லிசியா, தானே இதற்கு முன்னுதாரணமாக மாறிக்காட்டியுள்ளார் என வெஸ்ட்மினிஸ்ட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment