Saturday, September 25, 2010

மரண அடி! - பார்த்திருக்கின்றீர்களா? (வீடியோ இணைப்பு)

மரண அடி! சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள் பாத்திருக்கின்றீர்களா? இந்தியன் படத்தில், இந்தியன் தாத்தாவாக வரும் கமல்ஹாசன், மூன்று விரல்களை சொடுக்கி, வில்லன்களுக்கு அடிக்கும் ஒரு அடி ஆளையே முடித்துவிடும். அது அந்த படத்தின் ஹைலைட். ஆனால் உண்மையில் இப்படி முடியுமா?, இது  சாத்தியமா என இன்னும் கேள்வி எழுகிறதா?.

தெருமுனையில் பொருத்தியிருந்த சிசிடிவில் பதிவான ஒரு நேரடி காட்சி இது. பொது இடத்தில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய எச்சரிக்கையுணர்வின் அவசியம் கருதி  இங்கே இது பகிரப்படுகிறது.
மேன்செஸ்ட்டரின், ஓல்ஹாமில் அமைந்திருக்கும், ஒரு கேளிக்கை விடுதியில் இரு பிரிவினருக்கு இடையில் திடீரென மோதல் வந்துவிட்டது. உடனடியாக போலீஸார் விரைந்தனர்.  வெளியில் அழைத்து குறித்த மோதலில் ஈடுபட்டவர்களுடன் விசாரணை  நடத்தி கொண்டிருந்தனர்.

22 வயதிருக்கும். ஒரு சிறிய குள்ள உருவம். லூயிஸ் வெயிட்ச் என்பது அவன் பெயர். விசாரணை நடத்திய போலிஸ் காரர்  மொல்லேய்(25). அலட்சியமாக காற்சட்டை பையில் கைகளை வைத்தபடியே உரையாடிக்கொண்டிருந்தார். திடீரென கோபம் வந்த வெயிட்ச் உஷாரானான்.

'நீங்கள் நினைக்கலாம். நான் குள்ளமான, குண்டான ஒரு லாய்க்கில்லாதவனென. ஆனால் எனக்கு 'கில்லர் பஞ்ச்' (மரணத்தை  விளைவிக்கும் அடி) தெரியும் என்றவன், ஒரு தன் வலது கையால் மொல்லோயின் தலையை தாக்கினான்.

மூர்ச்சையான மொல்லோய் அப்படியே பின்னால் தொப்பென விழுந்தான். மார்ச் 15 ம் திகதி நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணைகளின் பின்னர், வெயிட்ச்சிற்கு 6 வருட கடூழிய  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது தான் வீடியே வெளியாகியுள்ளது,.

மூர்ச்சையான மொல்லோய்க்கு என்ன நடந்தது என தெரியுமா? 6 மணி நேரத்திற்கு மரணம் அழைத்துக்கொண்டது. இது   எச்சரிக்கையாக இருக்க வெண்டிய அவசியம் கருதிப் பகிரப்படும் வீடியோ செய்தி.

No comments:

Post a Comment