ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது. ஆனால், இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எவரும் சிந்தித்துப் பார்பதுமில்லை. அவ்வாறு சிந்திப்பவர்களின் புத்தியையும் மது என்ற பானம் மயக்கி விடும். மது அருந்துதல், புகைத்தல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணுதல் இந்த மூன்றும் எமது உடலுக்கு பாதகமானவையாகும். அளவுக்கதிகமான மதுபான வகைகளைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோய்களும் புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்றுநோயும் ஏற்படுகின்றன. இது தவிர, ஒருவர் புகைப்பிடிக்கும்போது அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகைப்பிடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தன்னிச்சையாக புகைப்பிடிப்பதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல என்பதுடன், பெண்கள் தன்னிச்சை புகைத்தலுக்கு ஆளாகுவதால் அவர்களது சந்ததியினருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. எமது நாட்டு அரசாங்கம் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக "மத்தட திட்ட" என்னும் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓரளவு வெற்றி கண்டது. தற்போது மதுபாவனையால் ஏற்படும் நோய்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அரசாங்கத்தின் இந்த நடமுறையானது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே. |
Saturday, August 28, 2010
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment