இந்த பேஸ்புக்கிற்கு பிரதியீடு என வர்ணிக்கப்படும் ஒரு இணைய தளத்தினை NYU மாணவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இந்த புதிய இணைய தளத்தினை செப்டம்பர் 15 ல் உலகத்திற்கு வெளிக்காட்டவுள்ளதாக வடிவமைப்பு குழு உத்தியோகபூர்வமாக(Blog Post) அறிவித்துள்ளது. DIASPORA என்று பெயர்வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு (இணையதளத்திற்கு) பொது மக்களிடம் இருந்தே நிதி வசூலிக்கப் பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான நிதியினை மக்கள் வழங்கியிருந்தார்கள். பேஸ்புக் ஸ்தாபகரான Mark Zukerberg ம் இத் திட்டத்திற்கு தனது அன்பழிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. DIASPORA ஒரு Open Source திட்டம் என்பது இதன் சிறப்பம்சமாகும். Privacy என்பதே இதன் தாரக மந்திரமாகும். Facebook ல் இல்லாத இந்த Privacy ஐ தேடி மக்கள் படையெடுப்பார்கள் என்பதே இந்த மாணவர்களின் எதிர்பார்ப்பாகும். காத்திருப்போம். எந்த அளவிற்கு இது பிரபல்யம் அடைகிறது என்பதை பார்ப்போம். |
Saturday, August 28, 2010
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment