Tuesday, January 25, 2011

உலக இயக்கத்தில் ஒரு நாள் (வீடியோ)


Ridly Scott, தயாரிப்பில், ஆஷ்கார் விருது பெற்ற பிரபல இயக்குனர் Kevin Macdonald உருவாக்கி வரும் Life In A Day (உலக இயக்கத்தில் ஒரு நாள்) டாக்குமெண்டரிக்கான,
சிறப்பு மாதிரி வீடியோ வெளியாகியுள்ளது. இவ் டாக்குமெண்ட்ரிக்காக, இயக்குனர் தெரிவு செய்த கடந்த 2010 இன் ஜூலை 24 ம் திகதி எனும் நாளில் சுமார் 80,0000 படக்காட்சிகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பதிவு செய்யப்பட்டு,
இயக்குனர் குழுமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சுமார் 1,125 காட்சிகளை மாத்திரம் இறுதிப்படத்திற்காக தெரிவுசெய்தார் கெவின் மெக்டானல்ட். அதில் ஸ்பெயின் நாட்டின் டகோனாவை சேர்ந்த அழகிய சிறுமி ஒருவர், அப்பிரதேச வாசிகள் அமைத்த மனித கோபுரத்தில் பயமில்லாமல் ஏறி நிற்கும் சாகச காட்சியும் இடம்பிடித்துள்ளது. இதனை Toniu Xou மற்றும் Patricia Marinez ஆகிய இருவர் படம்பிடித்தனர்.

எதிர்பாராத விதமாக அச்சிறுமியின் வீடியோ காட்சி கெவின் மெக்டானல்ட் மற்றும் குழுவினருக்கு பிடித்து போக, தமது டாக்குமெண்டரியில் அவர்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர் போலும்.
எதிர்வரும் ஜனவரி 27ம் திகதி சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள இவ் டாக்குமெண்டரியில் இச்சிறுமியின் சாகசங்களும் இடம்பெறுவதால், உற்சாகத்தில் இருக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர். இவ் டாக்குமெண்டரிக்கு தமது திறமையான படைப்புக்களை அனுப்பி வைத்த பல்லாயிரக்கணக்காருக்கு இதன் இறுதி வடிவம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், இறுதி படத்திற்காக தெரிவு செய்த காட்சிகளை தனித்தனியாக வெளியிடத்தொடங்கியுள்ளார் கெவின் மெக்டானல்ட். அவ்வகையில் முதலில் வெளிவந்துள்ளது இக்காட்சி!

Life In A Day டாக்குமெண்டரி போட்டி பற்றி நாம் வெளியிட்ட முன்னைய செய்தி.

'Life In a Day'- ஆஷ்கார் இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கும்!

No comments:

Post a Comment