ஒருவருடைய டிவிட்டர் பதிவுகளை படிக்கும் போது அவரை பற்றிய ஒரு கருத்து மனதில் தோன்றுவது அனைவருக்கும் இயல்பான ஒன்று. இந்த கருத்து சரியானது தானா என்று சோதிக்க விரும்பினால் ட்வீட்சைக்(Tweetpsych) இணையதளத்தை நாடலாம். டிவிட்டர் பதிவாளர்கள் பற்றிய உளவியல் சிந்தனையை வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. அதாவது இந்த தளமானது உளவியல் ஆலோசகர் போல டிவிட்டர் பதிவுகளை அலசி ஆராய்ந்து அந்த பதிவுகளை வெளியிட்டவர் பற்றிய அறிக்கையைத் தருகிறது. எந்த நபரைப் பற்றி அறிய வேண்டுமோ அவரது டிவிட்டர் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் உடனே அவரைப்பற்றியை அறிக்கையை தந்து விடும். அந்த நபருடைய எண்கள்,பணம்,நிகழ்காலம்,கடந்தகாலம்,எதிர்காலம்,கட்டுப்பாடு,உணர்வுகள்,புரிதல் என பல்வேறு தலைப்புகளை பட்டியலிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் அவருடைய டிவிட்டர் பதிவுகள் எப்படி அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. குறும்பதிவுகள் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக இருக்கின்றன,எந்த அளவுக்கு சமூகத்தன்மை மிக்கவையாக இருக்கின்றன என்பதையெல்லாம் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது. இந்த சாப்ட்வேர் உருவாக்கித்தரும் ஆய்வுகள் அனைத்தும் எந்திரதனமானது என்றாலும் அனைத்து விவரங்களும் அறிவியல் பூர்வமாக இருக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிவிட்டர் பதிவுகளை சமர்பித்து ஆய்வு செய்து கொள்ளலாம். |
Tuesday, January 25, 2011
ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள "டிவிட்டர் ஜோசியம்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment