Saturday, January 29, 2011

விவசாய காணியில் வேற்று கிரகவாசிகளின் சித்து வேலை?

இந்தோனாசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகில் உள்ள விவசாயக் கிராமம்தான் ஸ்லேமேன்.

அங்கு விவசாய நிலங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்வையிடச் சென்ற விவாசாயிகளுக்கு மாபெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

ஒரு விவசாய காணியில் வட்ட வடிவ கோலம் ஒன்று செதுக்கப்பட்டு இருந்தது.இக்கோலத்தின் விட்டம் 90 அடி.

இக்கோலத்துக்குள் கேத்திர கணித உருவங்கள், முக்கோணங்கள், சிறிய வட்டங்கள் ஆகியனவும் தென்படுகின்றன.

சனிக்கிழமை காலை வரை இக்கோலம் அங்கு இருந்திருக்கவில்லை.
எனவே விவசாயிகள் திகைத்துப் போனார்கள்.

ஆனால் இக்கோலத்தை மனிதர்கள் செதுக்கி இருக்கின்றசாத்தியப்படாத விடயம் என்று கூறுகின்றனர்.

இது வேற்று கிரகவாசிகளின் வேலை என்பது இவர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment