Saturday, January 29, 2011

சலவை இயந்திரத்தில் உடுப்பு தோய்த்துக் கொடுக்கும் நாய் (படங்கள் இணைப்பு)


பாரிசவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எஜமானிக்கு பக்க துணையாக இருந்து அநேக காரியங்களை செய்து கொடுக்கின்றது செல்லப் பிராணியான நாய்.



நாயின் பெயர் Sadie. வயது-04. எஜமானியின் பெயர் Sue Line. வயது 61. பிரிட்டனைச் சேர்ந்தவர்.

இவர் நாற்பது வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.


இதன் பின் இவரது உடல் இடுப்புக்கு கீழ் இயங்க மறுத்து விட்டது.

எனவே சக்கர நாற்காலியில்தான் எப்போதுமே திரிகின்றார்.


இவரால் மற்றவர்களைப் போல் சுயமாக செயல்பட முடியாது என்பது வெளிப்படை.

இவர் செல்லப் பிராணியாக நாய் ஒன்றை வளர்க்க நான்கு வருடங்களுக்கு முன் தீர்மானித்தார்.


பிறந்து சில வாரங்களே ஆன பெண் குட்டி ஒன்றை வாங்கினார்.

இந்நாய்க் குட்டி மிகவும் புத்திக் கூர்மை உடையதாக இருந்தது.

இந்நாய் எஜமானியம்மாவுக்கு பல விதங்களிலும் உதவி செய்ய இரு வருடங்களில் கற்றுக் கொண்டது.

எஜமானியம்மாவின் வாழ்க்கை முறையை இலகுவாக்கியது.

எஜமானியம்மாவுடன் கூடவே சொப்பிங் செல்கின்றது. கூடைகள், பைகள் போன்றவற்றை வாயில் கௌவிக் கொண்டு எப்போதும் செல்கின்றது. கொள்வனவு செய்யப்படும் பொருட்களை பத்திரமாக எடுத்துக் கொள்கின்றது.

எஜமானியம்மாவின் பணப் பையில் இருந்து பணத்தை எடுத்து காசாளரிடம் கொடுக்கின்றது.

சலவை இயந்திரத்துக்குள் அழுக்குத் துணிகளை அடைகின்றது. துணிகளை தரம் பிரிக்கின்றது. சலவை இயந்திரத்தின் கதவை மூடுகின்றது. சலவை இயந்திரத்தை இயக்குகின்றது.

எஜமானியம்மாவின் க்கையடக்கத் தொலைபேசி ஒலித்தால் எடுத்து வந்து கொடுக்கின்றது. வீட்டுக்கு வருகின்ற கடிதங்களை எடுத்து வந்து கொடுக்கின்றது. அணிந்து இருக்கும் உடுப்பை எஜமானியம்மா கழற்றிக் கொள்கின்றமைக்கும் உதவுகின்றது.

No comments:

Post a Comment