Tuesday, January 25, 2011

அழகான கன்னங்களை பெற வேண்டுமா?


அழகான கன்னங்களை பெற வேண்டுமா? உங்கள் முகம் மற்றவர்களை வசீகரிக்க வேண்டுமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டி இருப்பது ஒரு பெரிய குறையே இல்லை.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் மிக எளிதாக அழகான கன்னங்களை பெறலாம். உணவில் பெரும்பாலும் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த பொருட்களை நிறைய சேர்க்க வேண்டும்.

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

பருப்பு, கீரைகள், ஆகிய உணவுகளை அதிகம் சோ்த்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். தேவையில்லாமல் கவலைப்படுவதை விட்டு விடுங்கள்.
இப்படி செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி விடும்.

No comments:

Post a Comment