Tuesday, January 25, 2011

பெண்களின் இதழ்களே ஆண்களை மயக்குவது அதிகம்: ஆராய்ச்சித் தகவல்


பெண்களின் உடலில் எந்த உறுப்பு மிகுந்த அளவு ஆண்களை மயக்குகிறது என்ற ஆராய்ச்சியை இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அதில் கண்கள் மற்றும் தலைமுடியைவிட சிவப்பு நிற உதடுகள் தான் ஆண்களை அதிக அளவு மயக்குகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினாடிகளில் தங்களின் மனம் மயங்கியதாக தெரிவித்தனர். அதுவும் உதடுச்சாயம் பூசப்பட்ட உதடுகள் பெருமளவில் கவர்ந்ததாக கூறினர்.
சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும், இளஞ்சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்தனர். அதே நேரத்தில் பெண்களின் கண்களை பார்க்க 0.95 வினாடிகளும், தலைமுடியை பார்க்க 0.85 வினாடியை செலவிட்டதாக கூறினர்.

No comments:

Post a Comment