Saturday, January 22, 2011

வாய் இல்லாத குழந்தைக்கு சத்திர சிகிச்சை!

வாய் இல்லாத ஜீவன்கள் என்று தமிழிலே ஒரு சொல் உண்டு. ஆனால் வாய் இல்லாத குழந்தைகள் உலகின் பல பாகங்களிலும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


25 குழந்தைகள் வாய் இல்லாத ஜீவன்களாக அறியப்பட்டு உள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் அரைவாசிக்கும் அதிகமானவை இறந்து விட்டன .


ஏனெனில் உண்ண முடியாது. குடிக்க முடியாது. பேச முடியாது. ..... வாயைத் திறக்கவே முடியாது.

கம்போடியாவில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்த வாய் இல்லாத ஆண் குழந்தைதான் செங் சோபியா.

2005 ஆம் ஆண்டு இக்குழந்தை பிறந்தது.

பிறந்தது முதல் வாயை திறக்க முடியாத நிலையில் இருந்தது.

ஆனாலும் பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியர்கள் ஒரு நல்ல காரியம் செய்து இருக்கின்றனர்.

இக்குழந்தை பிறந்து சில நாட்களிலேயே கத்தி ஒன்றை பயன்படுத்தி உதட்டின் வலப் பக்கத்தில் சிறிய துவாரம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

குழந்தை ஒருவாறு தப்பிப் பிழைத்தது.

மூக்கால் தண்ணீரை குடித்தது.

உதட்டில் ஏற்படுத்தப்பட்ட துவாரம் மூலம் உணவு வழங்கப்பட்டது.

இக்குழந்தைக்கு வலது கையில் ஊனம். பாதங்களிலும் குறைபாடு.

வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் துவாரம் மூலம் எப்படி உணவு உண்ணலாம்? என்பதை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இக்குழந்தை கற்றுக் கொண்டது.

இக்குழந்தைக்கு 2011 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது.

சிங்கப்பூரில் இவ்வருட ஆரம்பத்தில் குழந்தைக்கு சத்திர சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக இடம்பெற்று உள்ளது.

பிறந்து ஆறு வருடங்களின் பின் இக்குழந்தை முதன் முதலாக வாயை திறந்து உள்ளது.

சிகிச்சைக்கு முந்தைய நிலை, சிகிச்சைக்கு பிந்திய நிலை ஆகியவற்றை படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment