Tuesday, December 21, 2010

ஆபீஸ் தொகுப்பின் திருட்டு நகல் பரிசோதனையை நிறுத்தியது மைக்ரோசாப்ட்


மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பை பயன்படுத்துபவர்கள் அதை மேன்படுத்தவோ அல்லது அதற்குரிய
சில டூல்களை http://office.microsoft.com/en-us/ இருந்து தரவிறக்கி பயன்படுத்த வேண்டுமாயின் மைக்ரோசாப்டின் Genuine Advantage  எனும் பரிசோதனையை கடக்க வேண்டும்.

இவ்வாறு மிக அதிகமாக சட்டவிரோதமாக நகலெடுத்து பயன்படுத்தப்பட்டுவரும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு திருட்டு நகலா இல்லையா என்பதை கண்டறியும் பரிசோதனைய திடீரென்று சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

எந்த வித அறிவித்தல்களும் இல்லாமல் திடீரென இதை நிறுத்தியுள்ள மைக்ரோசாப்ட் தற்போது நீங்கள் பாவிக்கும் ஆபிஸ் தொகுப்பிற்கு தேவையான அட் ஒன் அல்லது டெம்பிளேட் போன்றவற்றை தடையின்றி டவுண்லோட் செய்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

ஆபிஸ் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான டெம்பிளேட் மற்றும் மேலதிக டூல்களை உடனே டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

இணைப்பு http://office.microsoft.com/en-us/

No comments:

Post a Comment