ஒரு விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்பாத்திரத்திலுள்ள உறைந்த நிலையிலுள்ள சூப்பில் என்ன என்ன அடங்கியிருக்கிறது என்பதனை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் முடிவின் மூலம் அன்றைய மக்கள் என்ன வகையான உணவுகள் உட்கொண்டனர் என்பதனை அறிய முடியும் எனவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இது மாதிரியான பாத்திரம் ஒன்றை உறைந்த நிலையில் எடுத்திருப்பது சீன வரலாற்றிலேயே முதல் தடவையாகும் என ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம் கி.மு. 475-221 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்பதனை அறியலாம். சியான் மாகாணம் சீனாவின் ஆக தொன்மையான நகரங்களில் ஒன்றாகும், அதற்கு 3100 வருடங்கள் பிற்பட்ட வரலாறு பல உண்டு. இந்நகரம் சுமார் 1100 வருடங்கள் சீனாவின் தலைநகராகவும் இருந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும். இந்த சூப் உறைந்த நிலையுள்ள பாத்திரத்துடன் ஒரு வாசனைகள் அற்ற திரவம் அடங்கிய குடுவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது வயின் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. |
Saturday, December 18, 2010
2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment