Saturday, December 18, 2010

14 வயதில் குழந்தை பெற்றுள்ள பிரிட்டன் காதலர்கள்

பிரிட்டனில் பாடசாலை சிறுவர்கள் இருவருக்கு 14 வயதில் குழந்தை பிறந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் இளவயதில் குழந்தை பெற்றுள்ள தம்பதியினராக இவர்கள் கருதப்படுகின்றனர்.
ஜெமி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி ஏப்ரல் வெப்ஸ்டருக்கு இன்னமும் முகத்தில் குழந்தைத்தனம் மாறவில்லை.
சிறுமி 13 வயதாக இருந்த போது தன்னுடைய காதலன் நாதனுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் கருவுற்றிருக்கிறாள். தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகியுள்ளது. குழந்தையை நன்றாக வளர்ப்பது குறித்து பெற்றோர் இருவரும் இணைந்து ஆலோசித்தும் வருகின்றனர். தற்போது குழந்தை சிறுமியுடனும் அவர்தம் தாய் தந்தையரிடத்திலும் வளர்ந்து வருகிறது.
ஆனால் வார இறுதி நாட்களில் குழந்தையை தான் வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் மீதமுள்ள 5 நாட்களிலும் ஏப்ரல் வெப்ஸ்டர் குழந்தையை பராமரித்தால் போதும் என 14 வயதாகும் குழந்தையின் தந்தை நாதன் கூறுகிறார். இருவருமே தெற்கு வேல்ஸ் பகுதியிலேயே வசித்து வருகின்றனர் என்ற போதிலும் கூட இன்னும் தங்களுக்கு வயது இருப்பதால் எதிர்காலம் குறித்த முடிவெதையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment