Friday, September 17, 2010

குழந்தை பிறப்பதை ஸ்கெய்ப் மூலம் கண்ட அமேரிக்க சிப்பாய்!

ஸ்கெய்ப் (skype) மற்றும் ஜீடாக் (Gtalk) போன்ற பல வீடியோ சாட் இணைய சேவைகளின் மூலம் நாம் மற்றவரை பார்த்து உரையாடும் வசதியுள்ளது. இவை பெரும்பாலும் அரட்டை அடிப்பதற்காகவே பயன்பட்டுவருகிறது. சிலர் அலுவலக பணிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இவ்வகை வீடியோ சாட் சில விசேச தருணங்களுக்கும் பயன்படுகிறது என சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

சிலமாதங்களுக்கு முன்னால் அமேரிக்கா சிப்பாய் தனது குழந்தை பிறப்பதை பார்ப்பதற்காக ஸ்கெய்ப் (skype) வீடியோ சாட் பயன்படுத்தியுள்ளார். ஆம், அமேரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் சிப்பாய் ஒருவர் ஈராக் போரிற்காக அந்நாட்டிலிருந்த போது பிரசவத்திற்க்கு தயாரகிக்கொண்டிருந்த அவரது கருவுற்றிருந்த மனைவி தனது குழந்தை பிறப்பை தன் கணவர் நேரில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கணவர் உடனே நாடு திரும்ப இயலாத சுழ்நிலையில், ஸ்கெய்ப் வீடியோ சாட்டில் இதனை அரங்கேற்ற முடிவு செய்து, அவ்வாறே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை WGN-Tv தனது செய்தியில் தொகுத்து வழங்கியது. இந்த வீடியோ இரண்டு பகுதிகளாக உள்ளது.

முதல் வீடியோவில் பிரசவத்திற்க்கு தயாராக இருந்த மனைவி ஈராக்கில் இருக்கும் தனது சிப்பாய் கணவருடன் ஸ்கெய்ப் வீடியோ சாட்டில் தொடர்ப்பு கொண்டு, பின் ஆப்ரேசன் தியேட்டருக்குள் நுழைவது முதல், குழந்தை பிறந்து கணவர் மனைவி இருவரும் மகிழ்ச்சி அலையில் திகைக்கும் வரையிலான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு நடுவில் கணவன் மற்றும் மனைவியின் உரையாடல் காட்சிகள் ஹாலிவுட் படத்தில் வருவது போன்று உள்ளது.

இரண்டாவது வீடியோவில் ஈராக்கிலிருந்து திரும்பிய கணவர் தனது மனைவி மற்றும் மகனை காண வருவது. மேலும் குறிப்பிட்ட கணவன் மற்றும் மனைவியின் எண்ணங்களை விளக்குவதாக அமைகிறது. மிகவும் அருமை.

No comments:

Post a Comment