Friday, September 17, 2010

ஒரு மணித்தியாலயத்தினுள் காசநோயினை கண்டறியும் பரிசோதனை

 ஒருவருடைய உடலில் காசநோயினை உண்டாக்கக் கூடிய கிருமிகள் இருக்கின்றதா? என்பதனை ஒரு மணித்தியாலத்தினுள் கண்டறிவதற்கான பரிசோதனை ஒன்றினை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரை காலமும் காசநோய்க் கிருமிகளைக் கண்டறிய 8 கிழமைகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது துரிதமாகக் கண்டறியலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை ஹெல்த் புரடக்ஷ்ன் ஏஜன்ஸி என்ற விஞ்ஞான அமைப்பில் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். காச நோயினை உண்டு பண்ணக் கூடிய எந்த கிருமியானாலும் இந்தப் பரிசோதனையிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

காசநோய்க் கிருமிகள் தாக்குவோரில் 10 சதவீதமானோருக்குத் தான் மரணம் சம்பவிக்கும் ஆனாலும் ஆண்டொன்றிற்கு 10 லட்சம் காசநோயாளிகள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டில் 13 இலட்சம் மக்கள் காசநோய்க்கு பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கூட அதிகளவிலானோர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்த நவீன பரிசோதனை மூலம் தெரிவிக்கப்படுகின்றது. 
..

No comments:

Post a Comment