Friday, September 17, 2010

1800 ஆண்டுக்கு முன் கொல்லப்பட்ட குழந்தையின் எலும்புகூடு கண்டுபிடிப்பு

  இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது.

இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது.

1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment