Sunday, August 29, 2010

'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசி சர்ச்சை தொடர்கிறது

  இந்தியாவில் 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசியில் அனுப்பப்படும் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் இந்திய பாதுகாப்பு புலனாய்வு துறையினர் வாசிக்க கூடியதாக அமையாவிடின் அடுத்த வாரமளவில் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் சேவைகள் முற்றாகத் தடை செய்யப்படும் என இந்திய மத்திய அரசு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசியில் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படும்போது, அவற்றின் பரிமாணம் மாற்றப்பட்டதாகத் தென்படும் போதே பாதுக்காப்புச் சிக்கல்கள் உருவாகின்றன என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் காஷ்மீர் பகுதிகளில் 'பிளக்பெரி' கையடக்கத் தொலை பேசிகள் மூலம் கிளர்ச்சியாளர்கள் தகவல் பரிமாற்றம் செய்யலாம் எனவும் இந்திய பாதுகாப்பு புலனாய்வு துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்தியாவில் 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருகிறது. 

2008 ஆம் ஆண்டு மும்பாயில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போதும், கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 'பிளக்பெரி' தொலைபேசிக்கு ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. _

No comments:

Post a Comment