Sunday, August 29, 2010

பணிப்பெண் சித்திரவதை தொடர்பான வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு

  ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஆரியவதியின் வைத்திய அறிக்கையை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நேற்று ஏற்றுக்கொண்டுள்ளது என அரேபிய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண்ணிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

49 வயது பணிப்பெண்ணான ஆரியவதியின் உடலிலிருந்து 13 ஆணிகள்மற்றும் 5 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. _

No comments:

Post a Comment