Saturday, February 12, 2011

முகப் பருக்கள் நீங்க


முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தால் பருக்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்த்துக் கொள்ளவும், முகப் பருக்கள் நீங்கவும் தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
பருவை விரலால் கிள்ள வேண்டாம். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
1. 1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை எடுத்து, 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு, மிருதுவாக துடைக்கவும்.
2. எருமைப்பால் ஆடையை தினமும் இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.
3. பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்.

No comments:

Post a Comment