இந்த கார் குடிபோதையில் இருக்கும் சாரதியை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. சாரதியின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் சாரதி குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும். இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் ஓட்டுனரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஹெல்கஹோலின் விகிதத்தை கண்டறிந்து அவர் போதையில் உள்ளாரா? என கண்டறிய முடியும். இந்த கார் வெள்ளோட்ட சோதனை நடந்தது. அமெரிக்காவில் உள்ள வால்கம் நகரில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தை அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ரோய் லாகூட் நேரில் வந்து பார்த்தார். இக்காரை தயாரித்த நிபுணர்களை அவர் வெகுவாக பாராட்டினார். இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இது போன்ற காரை புழக்கத்தில் விடவேண்டும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர். |
Monday, February 7, 2011
போதையில் இருக்கும் சாரதியை காட்டிக் கொடுக்கும் வினோத கார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment