Monday, February 7, 2011

உங்கள் கணவனை வேறொரு பெண் கவர்ந்தால்...


நாகரீகம் என்ற போர்வையில் திருமணமான ஆண்களோடு நெருங்கிப் பழகி, அவர்களை தங்கள் `கட்டுப்பாட்டிற்குள்' வைத்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்.
ஹோட்டலில் நடந்த விருந்து ஒன்றில் தன் கணவரை இன்னொரு பெண் வசீகரிக்க, அவரை வித்தியாசமான முறையில் மீட்டார், தீபரதி என்ற பெண். அந்த அதிரடி ருசிகரத்தை அவரே விளக்குகிறார்...
பெரும்பாலான ஆண்கள் தங்கள் எதிரில் ஒரு கவர்ச்சியான பெண் வரும்போது அவளைக் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கின்றனர். இது எனக்குப் பிடிக்காது.
அன்று இரவு நான், என் கணவருடன் ஒரு விருந்திற்கு சென்றேன். ஓட்டலின் `பார்` அறையில் பார்ட்டி நடந்தது. எனது கணவர் ஆண்கள் பகுதியிலும், நான் பெண்கள் பகுதியிலும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தோம்.
என் கணவர் மிகவும் அழகாக இருப்பார். என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். அவர் அருகில் இல்லாமல் என்னால் தனியாக இருக்க முடியாது. எனவே நான் ஆண்கள் மத்தியில் இருந்த அவரைப் பார்த்து கண்ணடித்து என் அருகில் அழைத்தேன். பதிலுக்கு அவரும் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து கண்ணடித்தார்.
பார்ட்டியின் இடையே கவர்ச்சியாக உடையணிந்த ஒரு பெண் ஆண்கள் பகுதியில் புகுந்தாள். ஆண்களோடு அரட்டை அடித்ததோடு ஏற்கனவே நெருங்கிப் பழகியவள் போல் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த எனக்கு அவள் மீது வெறுப்பும், பொறாமையும் எழுந்தது.
ஒரு சில நிமிடங்களில் அந்தப்பெண் எனது கணவரைத் தொட்டுப் பேச ஆரம்பித்தாள். அவள் எல்லை மீறுவதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை. அவசரமாக எழுந்து முகம் கழுவும் அறைக்குள் சென்றேன். எனது உதட்டுச் சாயத்தை கழுவிவிட்டு மீண்டும் `பளிச்' உதட்டுச்சாயம் பூசினேன். ஆடையையும் சரி செய்து கொண்டேன்.
எனது உடம்பும் உள்ளமும் சூடாக இருந்ததை உணர்ந்தேன். முகம் கழுவும் அறையை விட்டு வெளியே வந்து எனது கணவரை நோக்கி வேகமாக நடந்தேன். அவர்கள் இருவருக்கும் இடையே நான் வந்ததால் என்னைக்கண்டு என் கணவர் தடுமாறினார்.
அப்போது நான் என் கணவரின் கழுத்தைச் சுற்றி இரண்டு கைளாலும் வளைத்து அணைத்துக் கொண்டே சூடாக முத்தம் கொடுத்தேன். பொதுவிடத்தில் பலருக்கு மத்தியில் என் கணவருக்கு முத்தம் கொடுத்ததைக் கண்டு அந்த கவர்ச்சிப் பெண் என்னை முறைத்துப் பார்த்தாள்.
முத்தம் கொடுத்ததோடு நிற்காமல் நான் என் கணவரின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு பெண்கள் முகம் கழுவும் அறையை நோக்கிச் சென்றபோது அனைவரின் கண்களும் எங்களையே பார்ப்பதை உணர்ந்தேன்.
என் கணவர் அளவுக்குமீறி குடித்திருந்ததால் நிற்க முடியாமல் தள்ளாடினார். நான் அவரது கன்னத்தில் படிந்திருந்த உதட்டுச்சாயத்தை கழுவிவிட்டு வெளியே அழைத்து வந்தேன். வந்த வேகத்தில் அனைவருக்கும் `குட் பை` சொல்லிவிட்டு மிக விரைவாக ஓட்டலை விட்டு வெளியேறினோம்.
நானும் எனது கணவரும் அதிகமாக குடித்திருந்ததால் கார் ஓட்டும் நிலையில் நாங்கள் இல்லை. நல்ல வேளையாக காரில் எங்கள் டிரைவர் இருந்தார். அவசரமாக வீடு வந்து சேர்ந்தோம்.

No comments:

Post a Comment