விமான சாகச நிகழ்ச்சி ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவான ``ஏரோ இந்தியா-2011'' என்ற விமான கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. பெங்களூர் எலகங்காவில் உள்ள விமானப்படை விமான நிலையத்தில் இந்த கண்காட்சி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிகள் நேற்று 2-வது நாளாக நடந்தன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட அதி நவீன மற்றும் கண் இமைக்கும் ந்நேரத்தில் பல நூறு மைல்கள் கடந்து செல்லக் கூடிய போர் விமானங்கள் வான மண்டலத்தில் சாகசங்கள் புரிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதை நூற்றுக்கணக்கானவர்கள் கண்டு களித்து பரவசம் அடைந்தனர். 74 வயது ரத்தன் டாடா நேற்றைய விமான சாகச நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, ``எப்-18'' என்ற அமெரிக்க யுத்த விமானத்தில் பறந்து சென்று சாகசம் நிகழ்த்தியதாகும். 74 வயதான ரத்தன் டாடா ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விமான கண்காட்சியில் கலந்து கொண்டு ``எப்-16'' என்ற அமெரிக்க போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்து இருந்தார். நேற்று அவர் பறந்து சென்ற விமானம், அதை விட கூடுதலான சக்தி கொண்ட ``சூப்பர் ஜெட்'` போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. அற்புதமான அனுபவம் விமானத்தில் அவர் இணை விமானியாக செயல்பட் டார். விமானிக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். விமானத்தில் பறப்பதற்கு முன்பு அவருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அசுர வேகத்தில் விமானம் பறக்கும்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து டாக்டர்கள் ஆய்வு நடத்தினார்கள். அமெரிக்க விமானத்தில் சுமார் 45 நிமிடங்கள் ரத்தன் டாடா வானத்தில் பறந்தார். வானில் பறந்து வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு தரை இறங்கிய ரத்தன் டாடாவிடம், விமான பயணம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, ``இது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்'' என்று ரத்தன் டாடா பதில் அளித்தார். இவரை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) இந்தி திரையுலகின் இளம் கதாநாயக நடிகர் ஷாகித் கபூர், ``எப்-16'' என்ற அமெரிக்க யுத்த விமானத்தில் பறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது |
Saturday, February 12, 2011
அமெரிக்க போர் விமானத்தில் 45 நிமிடங்கள் பறந்த ரத்தன் டாடா! 74 வயது இந்திய தொழில் அதிபரின் மகத்தான சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment