- முதலில் நீங்கள் shortcut செட் செய்ய நினைக்கும் தளத்தை ஓபன் செய்து Ctrl+D அழுத்தி புக்மார்க் செய்து தனி போல்டரில் சேமித்து கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு போல்டரிலும் ஒரு தளம் மட்டுமே இருப்பதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- நீங்கள் அடிக்கடி ஓபன் செய்யும் தளங்களை தனி தனி போல்டர் ஓபன் செய்து அதில் தனி தனியாக சேமித்து கொள்ளுங்கள்.
- அடுத்து இந்த லிங்கில் சென்று நீட்சியை Chrome Toolbox உங்கள் உலவியில் நிறுவி கொள்ளுங்கள்.
- இந்த நீட்சியை உங்கள் கணினியில் நிறுவியதும் ஒரு வளையம் போன்ற பட்டன் உங்கள் உலவியில் வந்திருக்கும் அதன் மீது க்ளிக் செய்து Options பகுதிக்கு செல்லுங்கள்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் Quick Launch என்பதை தேர்வு செய்து நான் கீழே படத்தில் காட்டி இருக்கும் போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- அந்த போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்கள் புக்மார்க் பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் Alt+1 கீயை ஷார்ட்கட் கீயாக தேர்வு செய்ய நினைக்கும் புக் மார்க் போல்டரை தேர்வு செய்து OK செய்து கொள்ளுங்கள்.
- அதே முறையில் கீழே உள்ள கட்டங்களில் உங்களுக்கு தேவையான தளங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- நீங்கள் இப்படி தேர்வு செய்து முடித்ததும் அந்த பக்கத்தை மூடி விடுங்கள்.
- இப்பொழுது உங்கள் உலவியில் நீங்கள் தேர்வு செய்த shortcut cut கீயை அழுத்துங்கள் உடனே அந்த தளம் ஓபன் ஆவதை காண்பீர்கள்.
- இது போல நாம் அடிக்கடி ஓபன் செய்யும் தளத்திற்கு செட் செய்து கொண்டு சுலபமாக திறந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment