Friday, January 21, 2011

PDF பைல்களை சுலபமாக மொழி மாற்றம் செய்ய


ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். அந்த சமயத்தில் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும் ஆக நமக்கு தேவையான மொழியில் தேடி நேரம் தான் விரயம் ஆகும். இனி அந்த கவலையே வேண்டாம் வேறு மொழிகளை இருந்தாலும் சுலபமாக ஆன்லைனில் அதை நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 59 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.
  • இதற்கு முதலில் இந்த Google Translate லிங்கில் செல்லுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும் 
  • அதில் நான் காட்டி இருக்கும் Translate a document என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Choose file என்பதை தேர்வு செய்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அங்கு TO என்ற இடத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய மொழிகளை தேர்வு செய்துகொள்ளவும். அந்த பட்டியலில் உள்ள 59 மொழிகளில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். 
  • முடிவில் அங்கு உள்ள Translate என்ற பட்டனை அழுத்தினால் போதும் அந்த தவல்களை நீங்கள் விரும்பிய மொழிகளில் பார்த்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் மாற்றம் செய்வதற்கு முன் 

No comments:

Post a Comment