வண்டி ஒட்டும் போது குறுந்தகவல்களை அனுப்புவது , நடந்து கொண்டே இது போன்ற வேலைகளை செய்வது உள்ளிட்டவற்றால் பெரும் விபரீதங்கள் ஏற்படும் என கடுமையாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல கொடிய விபத்துக்கள் நடைபெற்ற பின்னரும் 50 விழுக்காடு இளைய தலைமுறையினர் இவற்றை கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. மிகப்பெரிய ஷாப்பிங் நிலையமொன்றில் நடந்து கொண்டே குறுந்தகவல் அனுப்பிய இளம் பெண் நீரூற்று இருப்பது கூட தெரியாமல் அதற்குள் சென்று விழுந்துள்ளார். தன்னைச் சுற்றியோ , முன்னும் பின்னுமோ என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் பெண் நடந்து கொண்ட இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமெராவில் பதிவாகியுள்ளது. சில நிமிடங்களுக்குப் பின்னர் ஷாப்பிங் நிலைய ஊழியர்கள் மற்றும் காவலர்கள் உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான பின் பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெரும்பான்மையானோர் தங்கள் நண்பர்களுடன் இதை பகிர்ந்தும் வருகின்றனர். அந்த ஷாப்பிங் நிலையத்திலும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க இந்த காணொளி மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டப்பட்டு வருகிறது. |
Saturday, January 22, 2011
நடந்து கொண்டே குறுந்தகவல் அனுப்பும் அறிவாளிகளின் கவனத்திற்கு (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment