Saturday, January 22, 2011

ஆறிலிருந்து அறுபது வரை. இதுவரை கண்டிராத மகாராணியின் அரிய படங்கள் (படங்கள் இணைப்பு)

அடுத்த வருடம் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் வைர விழாவிற்காக இதுவரை கண்டிராத வகையில் கண்ணை மூடிக் கொண்டிருப்பது போன்ற ஒரு படம் கிறிஸ் லெவின் என்ற ஒளிப்படவியலாளரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது முப்பரிமாண படமாக முழுமையாக மாற்றப்பட்டு கலைக் காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. வைர விழாவையொட்டி ராணியின் பல அரிய படங்களும் காட்சியகத்தில் இடம் பெற உள்ளன.

ஆறு வயது முதல் ராணியின் இளமைக் காலங்களில் எடுக்கப்பட்ட அழகான படங்களும் இக்காட்சியகத்தை நிறைக்க உள்ளன.

முடிசூட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் , இளவரசர் ஆண்ட்ரியுவுடன் ராணி , உள்ளிட்ட பல அரிய படங்களையும் ராணியின் வைர விழாவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது .

ராணியின் உடல் மற்றும் தலைப் பகுதிகளை தனித்தனியே ஜஸ்டின் மோர்டிமர் வரைந்த ஓவியமும் இதில் இடம்பெறவுள்ளது எனத் தெரிகிறது.













No comments:

Post a Comment