மிகவும் சிரமமானதாகவும், அரிதானதாகவும் கருதப்படும் குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலமே அவர் தன் குரலினை மீளப்பெற்றுள்ளார்.
பிரெண்டா ஜென்ஸன் (52) என்ற அப்பெண்மணிக்கு கலிபோர்னிய பல்கலைக்கழக டேவிஸ் மருத்துவ மையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் 18 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் 13 நாட்களுக்கு பின்னர் அவர் தனது முதல் வார்த்தையை உச்சரித்துள்ளார்.
தற்போது பேச்சாற்றலை முழுதாக பெற்றுள்ள அவர் நேற்று இச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய குழுவினை சந்தித்துள்ளார்.
சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் இப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையைத் தொடர்ந்தே இவர் பேச்சாற்றலை இழந்துள்ளார்.
மருத்துவ வரலாற்றில் இதற்கு முன்னர் இச்சத்திர சிகிச்சையானது 1998 ஆம் ஆண்டிலேயே வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. .
No comments:
Post a Comment