பிதாலேட் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது என்பதுதான் ஆபத்துக்கு காரணமாக இருக்கிறது. இதனால் சுவரில் உள்ள பெயிண்ட் மற்றும் பொருட்களில் இருந்து சாதாரண சூரிய வெப்பத்தில்கூட பெதாலேட் மூலக்கூறுகள் உடைந்து ஆவியாகி காற்றில் கலக்கும். அதுமட்டுமல்ல சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற சாதாரண நேரங்களில் கூட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தண்ணீருடன் வினை பட்டு பிதாலேட் உணவுடன் கலந்து உடலுக்குள் செல்லுமாம். பிளாஸ்டிக் குழாய் வழியாக வரும் நீரை உபயோகப்படுத்தி சமைப்பதும் ஆபத்துக்கு உரியதாக கூறுகிறார்கள். இப்படி பல்வேறு வழிகளில் மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிடும் பிதாலேட், பிறகுதான் தன் அசுரத்தன்மையைக் காட்டத் தொடங்குகிறது. பிதாலேட் மூலக்கூறுகள் சிறுநீரகத்தை எளிதில் பாதிக்கிறது. அதேபோல டெஸ்டிரோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன்களை அழிக்கும் தன்மை உடையது. எனவே காலப்போக்கில் ஆண்மையை இழக்க வைக்கும் ஆபத்தும் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கருவில் இருக்கும் ஆண் குழந்தைகளைத் தான் இந்த ரசாயனம் எளிதாக பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வருடத்திற்கு 60 லட்சம் டன் பிதாலேட் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பல நிறுவனத்தினர் பிதாலேட் அளவை வெளியிடாததால் இந்த மதிப்பு உண்மை மதிப்பைவிடக் குறைவானது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தான் முதன் முதலாக பிளாஸ்டிக்கில் உள்ள பிதாலெட் ரசாயனம் ஆபத்துக்குரியது என்று தெரிய வந்தது. கர்ப்பமாக இருந்த எலிகளை ஆராய்ச்சி செய்தனர். அப்போது பிதாலெட் ரசாயனம் கருவில் உள்ள ஆண் எலிக் குட்டிகளில் டெஸ்டிரோஜென் ஹார்மோன் சுரப்பை தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்குறி வளர்ச்சி பாதிப்பு, விதைகளின் செயல்பாடு பாதிப்பு ஏற்படுவதும், அது அடுத்த சந்ததிகளுக்கு தொடரும் வகையில் நிலைபெறுவதும் தெரிய வந்தது. நியார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் பிறந்த ஆண் குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 134 குழந்தைகளை ஆய்வு செய்தபோது தாயின் வழியாக ஆண் குழந்தைக்கு பிதாலெட் பாதிப்பு தொற்றுவதாக தெரிய வந்தது. அது ஆணுக்குரிய பாலின ஹார்மோன் சுரப்பதையும், மறு உற்பத்தி ஆவதையும் தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே ஆய்வை அதிகம் பேரிடம் விரிவாக நடத்த அந்த ஆய்வுக்குழு முடிவு செய்திருக்கிறது. எந்திரங்கள் மூலம் உணவை பதப்படுத்தும் போதும், பிளாஸ்டிக் பாத்திரம், பாலிதின் பை ஆகியவற்றைப் பயன்படுத்துவதாலும் `பிதாலெட்’ உணவுடன் கலக்கிறது. பிளாஸ்டிக் கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலமும் இந்த ரசாயனம் மனிதனுக்குள் நேரடியாக செல்கிறது. உஷாராக இருங்கள்! |
Tuesday, December 21, 2010
ஆண்மையை அச்சுறுத்தும் 'பிளாஸ்டிக்…'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment