அதிவேக புல்லட் ரயில் சீனாவில் ஓடுகிறது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது. ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றைத் தயாரிக்கவுஉள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க விதத்தில் இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதில், அதிசக்தி வாய்ந்த 'ஜெட்' என்ஜின் மற்றும் ரொக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளன. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன. எதிர்வரும் 2012ஆம் ஆண்டு இக்கார் பாவனைக்கு வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார். ரிச்சர்ட் நோபல் ஒரு சிறந்த என்ஜினீயர். சாதனை படைப்பதில் ஆர்வம் படைத்தவர். கடந்த 1983ஆம் ஆண்டு மணிக்கு 1,019 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் டர்போ ஜெட் காரை நிவேதா பாலைவனத்தில் ஓட்டிக் கடந்து இவர் சாதனை படைத்துள்ளார் |
Saturday, December 18, 2010
உலகின் அதிவேக கார் உருவாக்கம் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆர்வம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment